இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 65 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து விளையாடிவருகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி மூன்று ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டி-20 போட்டியில் விளையாடவுள்ளது. முதல்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. அதில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது ஒருநாள் புனே மைதானத்தில் இன்று மதியம் ஒன்றரை மணிக்கு தொடங்கியது. பகல் – இரவு ஆட்டமான இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
ஆனால், நியூஸிலாந்து அணி வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. மார்டின் குப்டில் 11 ரன்களிலும், கோலின் முன்ரோ 10 ரன்களிலும் வில்லியம்சன் 3 ரன்களிலும் டெய்லர் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து நியூஸிலாந்து 20 ஓவரில் 76 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தவித்துவருகிறது. இந்திய அணி சார்பில் புவனேஸ்குமார் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.