உலகமெங்கும் 3200-க்கும் அதிகமான திரையரங்குகளில் ‘மெர்சல்’ வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறது.
அக்டோபர் 18-ம் தேதி வெளியீடு என்பதில் தீவிரமாக இருந்து வருகிறது ‘மெர்சல்’ படக்குழு. தற்போது இறுதிகட்டப் பணிகளை முடித்து வெளிநாட்டுக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ”உலகமெங்கும் 3292 திரையரங்குகளில் ‘மெர்சல்’ வெளியாகவுள்ளது. இன்னும் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இது ‘மெர்சல்’ தீபாவளி” என்று ’தேனாண்டாள் பிலிம்ஸ்’ ஹேமா ருக்மணி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மெர்சல்’. விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். தேனாண்டாள் பிலிம்ஸ் பெரும் பொருட்செலவில் தங்களது 100-வது படமாக தயாரித்திருக்கிறது.