30மில்லியன் டொலர்கள் பணக்காரரான தாத்தா!
கனடா-கிச்சினர், ஒன்ராறியோவை சேர்ந்த ஆஷ்மன் கென்னடி என்பவர் 30-மில்லியன் டொலர்கள் லொட்டோ மக்ஸ் பரிசை வென்றுள்ளார்.
தனது பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் சகிதம் ரொறொன்ரோவில் தனது பரிசுத்தொகையை பெற்று கொண்டார்.
தனது வெற்றியின் பெரும்பகுதியில் தனது குடும்பம் அனுகூலமடையும் என 69-வயதுடைய கென்னடி தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமைக்கான 60மில்லியன் டொலர்கள் ஜக்பொட் இருவருக்கிடையில் பகிரப்பட்டது.மற்றய வெற்றியாளர் ரொறொன்ரோவை சேர்ந்தவர்.
சிறிது பணத்தை பயணங்களில் செலவிடப்போவதாக தெரிவித்த கென்னடி பெருந்தொகை தனது குடும்பத்தின் அடுத்த தலைமுறைகளிற்கு செல்லும் என கூறினார்.இப்பணத்தின் மூலம் தனது பேரப்பிள்ளைகள் சிறந்த கல்வியை பெறுவர் எனவும் தெரிவித்துள்ளார்.