புஷ்கர் பிலிம்ஸ் புஷ்கரா மல்லிகார்ஜுனையா தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சச்சின் இயக்கத்தில், ரக்ஷித் ஷெட்டி, ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடிப்பில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் தயாராகும் படம் ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’. ரக்ஷித் ஷெட்டி, ஷான்வி ஸ்ரீவஸ்தவா, பாலாஜி மனோகர், பிரமோத் ஷெட்டி, மதுசூதன் ராவ் உள்பட பலர் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் சச்சின் கூறியதாவது: இது முற்றிலும் ஒரு கற்பனையான கதை. அமராவதி எனும் ஒரு பழமையான கிராமத்தில், புதையல் இருக்கிறது. அதனை யாராலும் எடுக்க முடியவில்லை. அதை எப்படி எடுக்கிறார்கள் என்பதுதான் கதை.
இப்படத்தின் கதாநாயகன் ரக்ஷித் ஷெட்டி சிரிப்பு போலீசாக நடிக்கிறார். அவருடன் இணைந்து ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடிக்கிறார். இப்படத்தில் அவர் ஒரு கொடூரமான வழிப்பறித் திருட்டு கூட்டத்தையும், ஒரு தந்திரமான அரசியல்வாதியையும் சமாளித்து எப்படி அந்த மர்மத்தை தீர்த்து வைக்கிறார் என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையுடன், ரசிக்கத்தக்க வகையில் பிரம்மாண்டமாக படமாக்கியிருக்கிறோம். என்றார்.