சத்யராஜ் நடித்துள்ள படம் ‛தீர்ப்புகள் விற்கப்படும்’. தற்போது இப்படம் இறுதிகட்டத்திற்கு வந்திருக்கிறது. படப்பிடிப்புகள் முடிவடைந்து, டப்பிங் பணிகளும் நிறைவடைந்திருக்கின்றன. சத்யராஜ் தான் நடித்த காட்சிகள் அனைத்திற்கும் தொடர்ந்து 12 மணி நேரம் பேசி டப்பிங் பேசியிருக்கிறார்.
இது குறித்து இயக்குநர் தீரன் கூறியதாவது: சத்யராஜுடன் இணைந்து பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது. படத்தின் முக்கிய கதாபாத்திரத்தை வடிவமைத்ததுமே அதற்கு சத்யராஜ் தான் மிகப் பொருத்தமாக இருப்பார் என்ற முடிவுக்கு வந்தேன். அவருடன் பணியாற்றி முடித்ததும் அவரது கடின உழைப்புக்கும், அர்பணிப்பு மிக்க நடிப்புக்கும் நான் தீவிர ரசிகனாகி விட்டேன்.
படத்தின் டப்பிங் பணிகளை முழுமையாக முடித்து விட்டோம். சத்யராஜ் தனது டப்பிங் பணிகளை 12 மணி நேரத்தில் முடித்து எங்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். படம் முழு வடிவம் பெற்றிருக்கும் விதம் குறித்து நாங்கள் மிகவும் மகிழச்சியோடு இருக்கிறோம்.என்றார்.