அதுல் அக்னிகோத்ரி தயாரிப்பில், அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில், சல்மான் கான் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு பாரத் என்று பெயர் வைத்துள்ளனர். இப்படம் 2014-ம் ஆண்டு வெளியான தென்கொரிய படமான “ஓடி டூ மை பாதர்”-ஐ தழுவி எடுக்கப்பட இருக்கிறது. இப்படம் 2019-ம் ஆண்டு ரம்ஜான் பண்டிகையின் போது ரிலீஸாக இருப்பதாக தயாரிப்பாளர் அதுல் அறிவித்திருக்கிறார். பொதுவாக குடும்ப பாங்கான படங்கள் எல்லாம் தீபாவளி பண்டிகையின் போது ரிலீஸாவது தான் சிறந்தது. சல்மான் படமும் 2019, ரம்ஜான் பண்டிகையில் தான் ரிலீஸாகிறது என்று கூறியுள்ளார் அதுல்.