கொடிய தீ விபத்தில் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் பலி.ஏழு பேர்கள் காயம்.
ரொறொன்ரோ-சனிக்கிழமை அதிகாலை ஹமில்ரனில் இடம்பெற்ற தீயில் வீடொன்று எரிந்து சாம்பலாகியதில் தாய் ஒருவரும் இரு குழந்தைகளும் கொல்லப்பட்டதோடு மற்றொரு வீடும் சேதமடைந்துள்ளது.
கொலையுண்டவர்கள் விக்டோரியா மேரி அவரது மகன் றொபேட் மற்றும் மகள் அபிகெயில் என குடும்ப அங்கத்தவர்ஒருவர் அடையாளம் காட்டியுள்ளார். இவர்களது மரணம் தெரியவந்ததும் சனிக்கிழமை சமூக ஊடகங்களில் துயர வெளிப்பாடு சொரியத்தொடங்கியது.
நயாகரா வீதியில் இக்கோர விபத்து நடந்தது. சனிக்கிழமை அதிகாலை 4.30மணியளவில் தீயணைப்பு பிரிவினர் அழைப்பு ஒன்றை பெற்றனர்.ஒரு மணித்தியாலத்திற்குள் அவ்விடத்திற்கு விரைந்தனர்.
மேரியும் அவரது பிள்ளைகளையும் காணவில்லை என கருதப்பட்டது. ஆனால் தீ அணைக்கப்பட்ட பின்னர் இவர்களது உடல் கண்டு பிடிக்கப்பட்டது.
விபத்திற்கான காரணம் குறித்த விசாரனை தொடர்கின்றது. சுவாலை ஏற்பட்ட போது மூவரும் மேல் மாடியறையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. எண்ணெய் பானை ஒன்று அடுப்பின் மேல் இருந்துள்ளது. விபத்திற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.
சம்பவம் நடந்த போது முதலாவது வீட்டில் பதினொரு பேர்கள் இருந்துள்ளனர்.வயதானவர்கள் மூவரும் இரண்டு சிறுவர்களும் 5.30மணியளவில் மக்மாஸ்டர் பல்கலைக்கழக மருத்துவ நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.இவர்கள் தீக்காயம் மற்றும் புகை மூட்டத்தால் பாதிக்கபபட்டிருந்தனர.; நயாகரா வீதியில் இலக்கம் 70மற்றும் 74ஆகிய இரு வீடுகளும் பாதிக்கப்பட்டதாகவும் சேதத்தின் மதிப்பீடு 200,000 டொலர்கள் மற்றும் 50,000 டொலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.
மேரி மற்றும் அவரது இரு குழந்தைகளின் மரணசடங்குகளிற்காக Go Fund Me கணக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.