கிருஷ்ணம்மாவான அனுஷ்கா

கிருஷ்ணம்மாவான அனுஷ்கா

அருந்ததீ, பாகுபலி,ருத்ரமாதேவி ஆகிய படங்களில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை அனுஷ்கா. தற்போது நடிகர் நாகர்ஜுனா கதையின் நாயகனாக ஓம் நமோ வெங்கடேசாய என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் கிருஷ்ணம்மா என்ற கேரக்டரில் நடிக்கிறார் அனுஷ்கா. அவரது தோற்றம் எப்படியிருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள். இந்நிலையில் இப்படத்தில் அனுஷ்காவின் தோற்றம் இப்படித்தான் இருக்கும் என்று ஒரு பதாகையை வெளியிட்டிருக்கிறார்கள் படக்குழுவினர். பக்தி ரசம் சொட்டும் தோற்றத்தில் அனுஷ்கா இருப்பதால் ரசிகர்களிடம் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது.

இதனிடையே இப்படம் தெலுங்கில் தயாரானாலும், தோழா படத்திற்கு பிறகு இந்த படமும் தமிழில் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகுபலி இரண்டாம் பாகம் படமும், சூர்யாவுடன் சிங்கம் மூன்றாம் பாகத்திலும் நடித்து வருகிறார் அனுஷ்கா.

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

Recent News