கனடாவினுள் நுளைவதற்கு இறுக்கமடையும் இலத்திரனியல் விசா!

கனடாவினுள் நுளைவதற்கு இறுக்கமடையும் இலத்திரனியல் விசா!

கனடாவினுள் பிரவேசிக்க இலத்திரனியல் பயண அனுமதி (eTA – Electronic Travel Authorization) பெறுவது கட்டாயமாக்கப்படவுள்ளது.

மார்ச் மாதம் 15ஆம் திகதி, இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டாலும், செப்டம்பர் மாதம் 29ஆம் திகதி வரைக்குமான காலத்தில் கனேடிய அரசு இந்நடைமுறையை அமுல்படுத்திவதில் தளர்வுப் போக்கைக் கடைப்பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது.

ஆகையால், செப் 29ஆம் திகதிக்கு பின்னர், விலக்களிக்கப்பட்ட நாடுகளிலிருந்து ஆகாய மார்க்கமாக கனடாவினுள் பிரவேசிப்போர் இலத்திரனியல் பயண அனுமதி, இல்லாது நாட்டிற்குள் பிரவேசிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கனடாவிற்கு வருவவர்களுக்கும், கனடாவினூடாக ஏனைய இடங்களிற்குப் பிரயாணம் செய்பவர்களிற்கும் (passing through in transit) இந்நடைமுறை பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.

கனேடியப் பிரஜைகள், நிரந்தர வதிவாளர்கள் மற்றும் அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோர் இந்த இலத்திரனியல் பயண அனுமதியைப் பெறவேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

– See more at: http://www.canadamirror.com/canada/67443.html#sthash.wOPOnDjZ.dpuf

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

Recent News