பாதுகாப்பான நாடுகள் பட்டியலிருந்து மெக்சிக்கோ நீக்கப்படவேண்டும்: ரொறொன்ரோ பல்கலைக்கழகம்

பாதுகாப்பான நாடுகள் பட்டியலிருந்து மெக்சிக்கோ நீக்கப்படவேண்டும்: ரொறொன்ரோ பல்கலைக்கழகம்

கனடாவினால் பாதுகாப்பான நாடுகள் என வகைப்படுத்தப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இருந்து மெக்சிக்கோ நீக்கப்படவேண்டும் என ரொறொன்ரோ பல்கலைக்கழக சர்வதேச மனித உரிமைக் கற்கை நிறுவனத்தால் விசாரணை அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

Kristin Marshall மற்றும் Maia Rotman என்ற ரொரொன்றோ பல்கலைக்கழக சட்டபீட மாணவர்களினாலேயே குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

மெக்சிக்கோ நாட்டில் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டோர், மற்றும் பாலியல் சிறுபான்மையினர் (sexual minorities) மீது மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களின் அடிப்படையிலேயே இந்த விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

பாலியல் சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் முகமாகவே இக்கோரிக்கையை விடுப்பதாக கூறும் இந்த ஆய்வறிக்கை, இவ்வாறு செய்யத்தவறுவது சர்வதேச சட்டக் கடைமையை மீறும் செயலாகும் எனவும் அவ்வறிக்கை கூறுகிறது.

2013ஆம் ஆண்டிலிருந்து, அகதிக் கோரிக்கைகள் தொடர்பாக, மெக்சிக்கோ பாதுகாப்பான நாடு எனக் கனடாவினால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய வகைப்படுத்தலினால், மெக்சிக்கோ நாட்டிலிருந்து கனடாவில் தஞ்சம் கோரும் பாலியல் சிறுபான்மையினர் பெரும் சவால்களை எதிர்நோக்குவதாக இவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

– See more at: http://www.canadamirror.com/canada/66228.html#sthash.BEtjLWfY.dpuf

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

Recent News