எண்ணெய் கசிவினால் குடிநீர் ஆலோசனை முன்னெச்சரிக்கை!

எண்ணெய் கசிவினால் குடிநீர் ஆலோசனை முன்னெச்சரிக்கை!

கனடா-பிரின்ஸ் அல்பேர்ட், சஸ்கற்சுவான்.- வடக்கு சஸ்கற்சுவான் ஆற்றில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் குடிநீர் ஆலோசனை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அறிவித்தல் வாரங்கள் அல்லது மாதங்கள் கூட ஆகலாம் என சஸ்கற்சுவான் அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரு நகரங்களில் அணையின் கீழ் உள்ள பள்ளத்தாக்கில் இருந்து Maidstone, Sask அருகில் Husky Energy pipeline கசிவு ஏற்பட்டதால் ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது.
35,000மக்களை கொண்ட பிரின்ஸ் அல்பேர்ட் நகரை எண்ணெய்திரைகள் எட்டியுள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை அறிவிததுள்ளனர்.
கிட்டத்தட்ட 70,000மக்கள் இதுவரை பாதிக்கப்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இதுவரை அந்த எண்ணெய் திட்டு 370கிலோ மீற்றர்கள் தூரம் வரை நகர்ந்துள்ளது.
கிட்டத்தட்ட 200,000 டமுதல் 250,000லிட்டர்கள் வரை சிந்தியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது—-இரண்டு ரெயில் தொட்டி கார்களிற்கு சமானமானது.
70,000 லிட்டர்கள் வரையிலான எண்ணெய்-மண்கலவை சுத்திகரிக்கப்பட்டடுள்ள போதிலும் மற்றய 118,000 லிட்டர்கள் பிசுபிசுப்பான நீர் ஆற்றிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. கல்கரி-சார்ந்த ஹஸ்கியின் கட்டுப்பாட்டாளரான ஹொங்ஹொங் கோடீஸ்வரான லி கா-ஷிங்கி சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

oiloil1oil2oiloil4oil5

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

Recent News