Thursday, June 30, 2022
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Entertainment

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

May 6, 2016
in Entertainment, Music, News, World
1
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

FINAL 2FINAL 1
13147842_10208339228070305_8629445824609014335_oஅவர்களின் ஆசைப்படி பரந்துவாழும் தமிழர்களிடம் சிறந்த இசை ஆற்றல் உண்டு என்றும் ஆனால் பல திறன்களை உடைய ஏராளமான பாடகர்கள் தகுந்த மேடைகளின்றி தங்களுடைய திறமைகளை வெளிக்கொணராமல் அல்லலுறுவதனையும் மனதில் கொண்டு இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் நோக்குடனேயே Lucid Nights என்ற இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது என இன்று நடைபெற்ற ஊடகவியலார் மகாநாட்டில் Andrew தெரிவித்திருந்தார்கள். உலகளாவியரீதியில் பாடும் திறன் கொண்ட தமிழர்களை ஒருங்கிணைக்கின்ற ஒரு பாலமாகவே Lucid Nights என்ற அமைப்பு செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்கள். புலம் பெயர்ந்துவாழும் மேற்கத்தைய ஐரோப்பிய நாடுகளில் தென் இந்திய மற்றும் எமது உள்ளூர் கலைஞர்களை பயன்படுத்தி ஏராளமான கலை, கவின்கலை, இசை, களியாட்டு நிகழ்சிகளை மேடையேற்றி சந்தோசம் அடைந்திருக்கின்றோம். பல நிகழ்சிகளில் திருப்பதி அடையாமல் பலவித குறைபாடுகளை எமது மக்கள் தெரிவித்து வருவதையும் நாம் அறிவோம். ஆனால் நன்கு திட்டமிடப்பட்ட ஒரு சில நிகழ்சிகள் பலரினது வரவேற்பினை பெற்றிருப்பதனை நாம் அறிந்திருப்பதில் வியப்பொன்றும் இல்லை. இந்த வகையில் உலக ஈழத் தமிழர்களின் ஒருங்கிணைப்பாக ஜெர்மனியில் வாழ்ந்துவரும் இசை என்ற பரிணாமத்தில் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி இன்றைய சமுதாயத்தினரை மட்டுமன்றி சகல வயது மட்டத்தினரையும் தொடர்ச்சியாக உலகளாவியரீதியில் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நனைத்துவரும் லூசிட் நையிற் என்ற இசைக்குழுவின் பெயருடன் இயங்கிவரும் மிகப்பிரபல்யமான இசைக்குழுவின் இசை இமயங்கள் என எல்லோராலும் அழைக்கப்படும் Mc Sai, Teejay, Inno Genga, Dayan Shan and Ram Agarathy ஆகியோர் தற்பொழுது கனடாவில் உள்ள எமது மக்களை இசையுடன் சங்கமித்து புதிய இசையுடன் நடனங்களையும் மிகவும் வித்தியாசமான முறையில் திட்டமிட்டு மகிழ்விக்க டொரோண்டோ விமான நிலையத்தில் இறங்கியுள்ளார்கள். தென்னிந்திய நட்சத்திரங்களை போலவே புலம்பெயர்ந்து வாழும் மக்களை நமது உள்ளூர் கலைஞர்களின் ஏராளமான இசை நிகழ்சிகள் கடந்த காலங்களில் விருந்தளித்து இருந்தாலும் வருகின்ற வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கின்ற இசை மற்றும் நடனம் கலந்த இசை முழக்கம் என்ற நிகழ்ச்சி கனடா வரலாற்றில் இதுவரை மக்கள் கண்டு ரசிக்காத ஓர் வினோத ஆடம்பர நிகழ்ச்சியாக அதாவது மேற்கத்தைய இசைக்குழுவினர் நமது குழுவினரின் இசை நிகழ்ச்சியின் தரத்தினை ஓர் உலக தராதரத்தில் அங்கீகாரம் செய்த இசை நிகழ்வாக நடத்த லூசிட் இசைக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அவ்வாறு என்னதான் இவர்கள் வித்தியாசமாக செய்யப்போகின்றார்கள் என்று உங்களில் பலருக்கு கேள்விக்கணைகள் உதிப்பதில் தப்பொன்றும் இல்லை. ஆனால் இந்த இசைக்குழுவில் உள்ளடங்கும் ஐரோப்பிய கலைஞர்கள் தொடர்ந்து உலகளாவியரீதியில் பல்வேறுவிதமான இசை நிகழ்சிகளை நடத்தி எமது தாயக உறவுகளை மகிழ்ச்சிப்படுத்தி வருகின்றனர். சிறப்பாக நமது கலைஞர்களினாலேயே பாடல்கள் தயாரிக்கப்பட்டு அவற்றுக்கான இசை வடிவங்களும் நமது கலைஞர்களினாலேயே சேர்க்கை செய்யப்பட்டிருப்பது இந்த இசை விழாவின் சிறப்பம்சமாகும். பலவிதமான பாடல்கள் குறிப்பாக ஆடல்களுடன் கூடிய குத்துப்பாடல்கள் மற்றும் இன்ப அதிர்வுகளை சொரியும் இனிமையான காதல் பாடல்கள் என பல்வேறுவிதமான பாடல்களை பாடி அசத்த இருக்கின்றார்கள். மேலாக சிறப்பான நகைச்சுவை குழுவினர்கள் கூட லண்டன் மாநகரில் இருந்து வருகை தந்திருக்கின்றார்கள். அந்தவகையில் இவர்கள் தற்போது கனடாவின் Scarborugh நகர மக்களை இசையுடன் ஒன்று சேர்க்க பல்வேறு விதமான நடன கோர்வைகளை தயார் செய்து மேடையின் பல பகுதிகளிலும் அழகான வர்ண மின்சார விளக்குகளின் அதிர்வுகள் ஜொலிக்க நடன தாரகைகளுடன் எங்கள் நடன இசைப்புயல் ராம் அகராதியின் நடன அங்கத்தவர்கள் இணைந்து சிறப்பான பாடல் வரிகளின் இசைத்துடிப்பில் நடனங்களை பாடல் வரிகளுக்கு ஏற்ப இயக்கி பாடி ஆட்டம், கொண்டாட்டம், மகிழ்ச்சி என்ற கோட்பாட்டில் நிகழ்த்த உள்ளனர். Lucid Nights வழங்கும் Spring Splash 2016 என்ற கலைநிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பதை சமூகவலைத்தளங்களில் முன்னர் குறிப்பிட்டிருந்தாலும் நமது ஐரோப்பிய கலைஞர்களான புகழ் பூத்த Mc Sai, Teejay மற்றும் Inno Genga ஆகியோரின் பாடல் நிகழ்ச்சிகளுடன், ராம் அகராதி குழுவினரின் நடனமும் வருகின்ற வெள்ளிக்கிழமை அதாவது 6ஆம் திகதி அரங்கேற உள்ளது. இந்நிகழ்ச்சியை Dayan Shan தொகுத்து வழங்க இருப்பது விழாவின் வெற்றியினை இமயத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் வியப்பொன்றும் இல்லை. இந்நிகழ்ச்சிக்கான Promoவும் வித்தியாசமாக ரசிக்கும் படியாக உருவாகியுள்ளதுடன் அதனை நான் பல தடவைகள் பார்த்து அசைந்து போனேன். வழக்கமாக ஏ ஆர் ரகுமான், இயக்குனர் ஷங்கர், சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் போன்றவர்களின் வீடியோ கிளிப்புகளை பார்த்து வந்த எங்களுக்கு இந்த இசைக்குழுவின் ப்ரோமோஷன் வீடியோ கிளிப்பை பார்த்து ஒரு கணம் அசைந்து போனேன். நிமிடத்திற்கு நிமிடம் இசையின் தாக்கம், இசைக்கருவிகளின் ஒன்றுமித்த சங்கமம், பாடகர்களின் துடி துடிப்பான இனிமையான குரலில் அமைந்த வசீகர பாடல்கள் என எல்லாம் கலந்த இசை விருந்தாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. மகாநாட்டின் இறுதியில் Andrew அவர்கள் ஊடகவியலாளருக்கு நன்றி செல்லுத்தி அவர்களுக்கு உரிய இலவச அனுமதி சீட்டினை வழங்கினார்கள். மே 6ம் திகதி நடைபெற உள்ள இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை பெற உடனடியாக விழாக்குழுவினருடன் தொடர்பு கொண்டு டிக்கட்டை முன்பதிவு செய்தோ அல்லது வாங்கியோ உங்களது வருகையை உறுதிசெய்து கொள்ளும்படி வேண்டி நிற்பதுடன் நமது யேர்மன் நாட்டு ஈழத்தமிழர்களை ஊக்குவிக்க அலை அலையாக திரளும் படி கேட்டு இந்த செய்தியை நிறைவு செய்கின்றேன்.
Langes, FCPA, FCGA
tamilbc.ca
easy24news.com
langes lingam

Previous Post

Next Post

Next Post

Comments 1

  1. Pingback: https://graph.org/Omicron-Variant-Symptoms-Is-An-Excessive-Amount-Of-Mucus-A-COVID-19-Symptom-02-24

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
பொருளை வைத்து குணத்தை மதிப்பிடாதே! – கிருபா பிள்ளை பக்கம்

புதுப்பொலிவுடன் உங்கள் ஈஸி24நியூஸ்! | கிருபா பிள்ளை

May 17, 2022
ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

நாளைய அரங்கேற்றத்திற்கு மகிந்த இன்று திடீர் வருகை

May 18, 2022
சவுக்கு சங்கர் இலங்கை அரசுக்கான இன்றைய புதிய ‘சோ’வா (சோ.ராமசாமி)? | கிருபா பிள்ளை

சவுக்கு சங்கர் இலங்கை அரசுக்கான இன்றைய புதிய ‘சோ’வா (சோ.ராமசாமி)? | கிருபா பிள்ளை

May 27, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

June 29, 2022
தேவர்மகன் 2ஆம் பாகத்தில் விக்ரம்?

சீயான் விக்ரமின் ‘கோப்ரா’ வெளியீட்டு திகதி அறிவிப்பு

June 29, 2022
ஈஸி24நியூஸின் யூடியூப் செய்திகள்

ஈஸி24நியூஸின் யூடியூப் செய்திகள்

June 29, 2022
விம்பிள்டன் டென்னிஸில் மீண்டும் விளையாடக்கிடைக்குமா என்ற சந்தேகத்தில் செரீனா

விம்பிள்டன் டென்னிஸில் மீண்டும் விளையாடக்கிடைக்குமா என்ற சந்தேகத்தில் செரீனா

June 29, 2022

Recent News

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

June 29, 2022
தேவர்மகன் 2ஆம் பாகத்தில் விக்ரம்?

சீயான் விக்ரமின் ‘கோப்ரா’ வெளியீட்டு திகதி அறிவிப்பு

June 29, 2022
ஈஸி24நியூஸின் யூடியூப் செய்திகள்

ஈஸி24நியூஸின் யூடியூப் செய்திகள்

June 29, 2022
விம்பிள்டன் டென்னிஸில் மீண்டும் விளையாடக்கிடைக்குமா என்ற சந்தேகத்தில் செரீனா

விம்பிள்டன் டென்னிஸில் மீண்டும் விளையாடக்கிடைக்குமா என்ற சந்தேகத்தில் செரீனா

June 29, 2022
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures