Monday, June 27, 2022
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஈழத் தமிழர்களின் வரலாற்றில் புதிய சாதனையை ஏற்படுத்திய ” படைப்பாளிகள் உலகம்” தலைவர் ஐங்கரன்!

April 17, 2016
in News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈழத் தமிழர்களின் வரலாற்றில் புதிய சாதனையை ஏற்படுத்திய
” படைப்பாளிகள் உலகம்” தலைவர் ஐங்கரன்!
நாளை நடைபெறும் ” படைப்பாளிகள் உலகம்” பெருமையுடன் வழங்கும் ” சாரதிச் சகோதரர்களுக்கு ஒரு சல்யூட் ” என்ற நிகழ்வு திட்டமிட்டபடி நாளையதினம் நடைபெற உள்ளது. ” படைப்பாளிகள் உலகம்” என்ற அமைப்பின் தலைவர் ஐங்கரன் அவர்கள் சிறுவயதில் இருந்தே தமிழ் சமூகத்தின் மீது மிகவும் அக்கறை உள்ளவர்களாக அதிலும் குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய கலை மற்றும் கவிதைகள் என தமிழ் மீது மிகவும் அக்கறை உடையவர்களாக இருந்துவருகின்றார்கள் என்பதை நாம் அறிவோம். ஐங்கரன் அவர்கள் தங்களது பிள்ளைகளுக்கு கூட தமிழின் மீது கொண்டுள்ள அதீத விசுவாசத்தின் காரணமாக தமிழ், குறள் மற்றும் கவிதை என தகலாது பிள்ளைகளுக்கு பெயரிட்டு தமிழின் அடையாளத்தினை காப்பாற்றிவரும் ஓர் தமிழ் சமூக தலைவராகவும் கலை, கலாச்சார நிகல்விகளை வளர்ப்பதிலும் இலக்கியங்கள் அழிந்துவிடாமல் அவற்றிக்கு தங்களது கவிதை எழுதும் ஆற்றலால் ஓர் பாதுகாவலராகவும் மற்றும் தரமான கலைனர்களை அடையாளம் கண்டு அவர்களுக்குரிய கௌரவங்களையும் வழங்கி அவர்களை சமுதாயத்தில் ஓர் சிறந்த கலைனர்களாக வளர்ந்துவர தொடர்ந்து அயராது உழைத்துவருபவர் எனக்கூறுவதில் பெருமிதம் கொள்கின்றேன். அந்தவகையில் நாளையதினம் நடைபெற இருக்கின்ற ” படைப்பாளிகள் உலகம்” பெருமையுடன் வழங்கும் ” சாரதிச் சகோதரர்களுக்கு ஒரு சல்யூட் ” என்ற நிகழ்வில் ஓர் அங்கமாக ஈழத்தின் முதல் பெண் இசையமைப்பாளர் பிரபாலினி பிரபாகரன் அவர்களை ஐங்கரன் அவர்கள் அடையாளம் கண்டு அவர்களின் திறமைகளை முதன் முதலாக புலம்பெயர்ந்துவாழும் இந்த கனடா மண்ணிலே அவர்களை வரவழைத்து அவர்களின் பாடல்கள் அடங்கிய இசை ஆல்பம் ஒன்றினையும் வெளியிடுவதற்கு வழிசமைத்த ஓர் உன்னத தலைவர்தான் நமது இதயங்களில் இடம்பிடித்திருக்கும் “ஐங்கரன்” அவர்கள். நாளைய தினம் நடைபெற இருக்கின்ற விழாவின் ஓர் முன்னோடியாக விழா பற்றிய தகவல்களை வழங்கும் நோக்குடனும் மேலாக ” படைப்பாளிகள் உலகம்” பெருமையுடன் வழங்கும் ” சாரதிச் சகோதரர்களுக்கு ஒரு சல்யூட் ” நிகழ்வில் திறமையை பறைசாற்ற கனடா வந்திருக்கும் பிரபாலினி அவர்களை அறிமுகம் செய்யும் நோக்குடன் இன்று ஓர் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. யார் இந்த பிரபாலினி? பிரபாலினி அவர்களின் சிரமமான வேலைப்பளுவின் மத்தியிலும் தொலைபேசியினூடாக ஓர் சிறப்பான நேர்காணலை ஏற்படுத்தியிருந்தேன். அவர்கள் வழங்கிய தகவல்களின் தொகுப்பு இங்கே: இலங்கை மண்ணின் இசை மணம் கமழும் இனிய குடும்பம் அது. அப்பா திரு எம்.பி. பரமேஷ் ஈழத்து மெல்லிசை மன்னர். இலங்கையில் முதல் இசைத்தட்டினை வெளியிட்ட தமிழர். அம்மா சங்கீத பூஷணம் திருமதி மாலினி பரமேஷ். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இசையில் பட்டம் பெற்றவர். இந்த இசைத்தம்பதியின் அருமைப் புதல்வியருள் ஒருவரே பிரபாலினி பிரபாகரன். தாய் வழியிலும், தந்தை வழியிலும் இசையுடன் தொடர்புடைய பாரம்பரியத்தைக் கொண்ட பிரபாலினி தனது நான்கு வயதிலேயே மேடையேறிப் பாடியவர். தன்னுடைய தந்தையாரிடம் இசையை முறைப்படி பயிலத் தொடங்கிய பிரபாலினி இன்று இலங்கையின் முதல் பெண் இசையமைப்பாளர் எனும் சிறப்புப் பெறும் அளவிற்கு உயர்ந்துள்ளார். இவரது கணவர் திரு பிரபாகரன். அடிப்படையில் தகவல் தொழில்நுட்பப் பொறியாளரான பிரபாகரன் ஒரு தேர்ந்த கணிதவியல் அறிஞர். நல்ல கித்தார் மற்றும் தபேலா கலைஞர். சிறந்த ஒலிப் பொறியாளரும் ஆவார். தற்போது தன் கணவர் பிரபாகரனுடன் அமெரிக்காவில் வசிக்கும் பிரபாலினி 1979 – 1984 காலகட்டத்தில் இலங்கை முழுவதும் 200க்கும் மேற்ப்பட்ட மேடைகளில் தன்னுடைய இசை நிகழ்ச்சியினை வழங்கியிருக்கிறார். 1986 ல் குடும்பத்துடன் ஜெர்மனி நாட்டிற்குப் புலம்பெயர்ந்த பிரபாலினி 1987 முதல் 93 வரை பல்வேறு இசைக்குழுக்களுடன் இணைந்து ஜெர்மன், நெதர்லாண்ட்ஸ், டென்மார்க் மற்றும் ஐக்கிய ராச்சியம் ஆகிய இடங்களில் 45 க்கும் மேற்பட்ட மேடைகளைத் தன் இசைத் திறத்தால் அலங்கரித்தவர். ஜெர்மனியின் பிரபல “யங் ஸ்டார்ஸ்” இசைக்குழுவில் ஒரு முன்னணிப் பெண் பாடகராக இணைந்து 1993 – 95 காலத்தில் 50க்கும் அதிகமான மேடைகளைக் கண்டவர். பிரபாலினி எழுதி, மெட்டமைத்துப் பாடிய “நாங்கள் இளைய கலைஞர்கள்” பாடலுக்கு தமிழ் அருவி போட்டியில் சிறந்த பாடலாசிரியர் விருது பிரபாலினிக்குக் கிட்டியது. இப்பாடல் யங் ஸ்டார்ஸ் குழுவில் மேடையேறியது. 1995ல் பிரபாலினியின் முதல் ஆல்பமான “சங்கீத சாம்ராஜ்யம்” வெளிவந்தது. இதில் அவரது தந்தையார் ஈழத்து மெல்லிசை மன்னர் எம்.பி. பரமேஷ் மற்றும் தாயார் மாலினி பரமேஷ் பங்கேற்றிருந்தனர். ப்ரபாலினியின் சகோதரி பிரியந்தினி இதில் தனது முதல் பாடலைப் பாடினார். இந்த சங்கீத சாம்ராஜ்ஜியம் ஆல்பம் தான் பிரபாலினிக்கு இலங்கையின் முதல் பெண் இசையமைப்பாளர் என்கிற சிறப்பைப் பெற்றுத்தந்தது. ஜெர்மனியின் சன் ஷைன், டை ராக்கேர்ஸ், பெர்லின் டூர் போன்ற பல்வேறு இசைக் குழுக்களில் முக்கியப் பாடகியாக1996 – 99 காலகட்டத்தில் 150க்கும் அதிகமான மேடைகளில் முழங்கினார் பிரபாலினி. கலைக்காவலர் ஸ்ரீபதி 1996ல் பிராங்க்பர்ட் தமிழ்ச் சங்கத்தின் மூலமாக பிரபாலினிக்கு வழங்கிய சிறப்பானதொரு விருதுதான் ஈழத்து மெல்லிசைக் குயில். 1999ல் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு இணைந்து தனது சொந்த இசைக் குழுவான ரிதம்ஸ் ஐத் துவங்கினார் பிரபாலினி. நூற்றுக்கணக்கான மேடைகள்… பல்லாயிரம் ரசிகர்கள் என இந்த ஈழத்து மெல்லிசைக் குயில் தொட்ட சிகரங்கள் சொல்லியடங்கா.
இதுவரையில் பிரபல இசைக் கலைஞர்கள் தீபன் சக்கரவர்த்தி, கங்கை அமரன், மாலதி, அப்துல் ஹமீது இவர்களோடும்; இவரின் தந்தையார் எம்.பி. பரமேஷ், தாயார் மாலினி பரமேஷ் ஆகியோருடனும் தனது மேடையை இவர் பகிர்ந்துகொண்ட விதம் அபாரமானது. இலங்கை, இந்தியா, ஜெர்மனி, ஸ்விஸ், நெதர்லாண்ட்ஸ், லக்சம்பர்க், இங்கிலாந்து, பிரான்ஸ், டென்மார்க், பெல்ஜியம், நார்வே, கனடா மற்றும் அமெரிக்கா என்று உலகம் முழுதும் பறந்து பறந்து இசைக்கோலமிட்டு வருபவர் பிரபாலினி. தமிழின் இசைத்துறையில் ஒரு பெண் இசை ஆளுமை எனும் வகையில் இன்றைய நம்பிக்கைத் தாரகையாக ஜொலிக்கும் பிரபாலினி பிரபாகரன் உருவாக்கியுள்ள புதிய இசைத் தொகுப்பு “குயின் கோப்ரா”. கலிபோர்னியாவின் ரிதம் ரெக்கார்ட்ஸும், இந்தியாவின் ப்ரேவோ மியூசிக்கும் இணைந்து பெருமையுடன் வழங்கியுள்ள சர்வதேச ஆல்பம் இது. தமிழ், ஆங்கிலம், ஸ்பானிஷ், ஜெர்மன் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ஹாலிவுட் தரத்தில் தயாராகியுள்ள இந்தத் தொகுப்பு சென்னையில் கடந்த ஆகஸ்ட்டில் இசை அறிஞர்கள், திரைக் கலைஞர்கள், அரசியல் பிரமுகர்கள் திரளாகப் பங்கேற்ற பிரம்மாண்ட நிகழ்வில் வெளியிடப்பட்டது. உலக இசை அறிஞர்கள் பலரும் பாராட்டிய இந்த குயின் கோப்ராவுக்கு – உலகெங்குமுள்ள தமிழ் இசை ரசிகர்களின் மனங்கவர்ந்த இந்த குயின் கோப்ராவுக்கு இப்போது இன்னொரு மகுடம் ஏறியிருக்கிறது. ஆம், பிரபாலினியின் “குயின் கோப்ரா” வுக்கு இந்த ஆண்டின் (2016) மதிப்புமிக்க “ஸ்பெஷல் ஜூரி எடிசன் விருது” கிட்டியிருக்கிறது. முதல்முறையாக சினிமாவுக்கு வெளியே ஒரு ஆல்பம் இவ்விருதினைத் தட்டிச்சென்றிருப்பது பிரபாலினிக்கு மட்டுமல்ல, நமக்கும் பெருமைதானே? இறுதியில் நீங்கள் தானே இலங்கையின் முதலாவது இசை இயக்குனர் என்று வினவ அவர்களும் சிரித்த புன்முறுவலுடன் நான் தான் என்று கூறியபோது எனது கண்களில் சந்தோஷ கண்ணீர்கள் சொரிந்தன. அதனைத் தொடர்ந்து அவர்கள் முதன் முதலாக பலமொழிகளை உள்வாங்கி பாடல்களை ஓர் ஆல்பம் ஆக தயாரித்த பெருமை தங்களுக்கே சாரும் எனவும் அதற்கு என்ன பெயர் சூட்டியுள்ளீர்கள் எனக்கேட்டபோது “குவின் கொப்பரா” எனக்கூறினார்கள். கடந்த காலங்களில் தாங்கள் பல விருதுகள் பெற்றுள்ளதாகவும் கூறினார்கள். இன்றைய ஊடக சந்திப்பில் தங்களை இங்கு வரவழைத்தது மட்டுமல்லாமல் தங்களுடைய இசைப்பயணத்திட்கு “ஐங்கரன்” அவர்களின் செயற்பாடு ஓர் திருப்புமுனை என்றும் எவரும் செய்யாத ஓர் வரலாற்று சாதனையை அவர்கள் செய்துள்ளார்கள் என அழுதபடி கூறியபோது அங்கு இருந்த அனைவரினதும் கண்களின் ஆனந்த கண்ணீர் சொரிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இன்றைய ஊடக சந்திப்பில் உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர் என் லோகேந்திரலிங்கம், என்ற இணையத்தளத்தின் பிரதம ஆசிரியர் இலங்கேஸ், தொழில் அதிபர்கள் கிருபா, ஷங்கர், வானொலியின் சார்பாக ராகுலன், துளிர் சஞ்சிகையின் சார்பாக சிவம், இளம் அரசியல்வாதி நிரஞ்சன், மற்றும் புதிதாக ஆரம்பித்திருக்கும் வானொலியின் அங்கத்தவர் ஸ்ரீ என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Langes, FCPA, FCGA
Canada Hindu Temple Association
easy24news.com

Previous Post

பாடும் மீன்கள் இரவு 2016 மண்டபம் நிறைந்த விருந்தினர்கள்

Next Post

ரொறன்ரொவில் திருவையாறு -2016 விழாவில் 600 க்கும் மேற்பட்ட மாணவர்களின் கவின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற இருப்பது உலகத் தமிழர்களின் வரலாற்றில் ஓர் சாதனை

Next Post

ரொறன்ரொவில் திருவையாறு -2016 விழாவில் 600 க்கும் மேற்பட்ட மாணவர்களின் கவின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற இருப்பது உலகத் தமிழர்களின் வரலாற்றில் ஓர் சாதனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
பொருளை வைத்து குணத்தை மதிப்பிடாதே! – கிருபா பிள்ளை பக்கம்

புதுப்பொலிவுடன் உங்கள் ஈஸி24நியூஸ்! | கிருபா பிள்ளை

May 17, 2022
ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

நாளைய அரங்கேற்றத்திற்கு மகிந்த இன்று திடீர் வருகை

May 18, 2022
சவுக்கு சங்கர் இலங்கை அரசுக்கான இன்றைய புதிய ‘சோ’வா (சோ.ராமசாமி)? | கிருபா பிள்ளை

சவுக்கு சங்கர் இலங்கை அரசுக்கான இன்றைய புதிய ‘சோ’வா (சோ.ராமசாமி)? | கிருபா பிள்ளை

May 27, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

ராஜபக்ச குடும்பம் சொத்துகளை மறைத்து வைத்துள்ள நாடுகள் குறித்து தகவல்

ராஜபக்ச குடும்பம் சொத்துகளை மறைத்து வைத்துள்ள நாடுகள் குறித்து தகவல்

June 27, 2022
நாட்டின் பல பகுதிகளில் டோக்கன் முறையில் எரிபொருள் விநியோகம்

நாட்டின் பல பகுதிகளில் டோக்கன் முறையில் எரிபொருள் விநியோகம்

June 27, 2022
அயர்லாந்துக்கு எதிரான இருபதுக்கு – 20 போட்டியில் இந்தியாவுக்கு இலகு வெற்றி

அயர்லாந்துக்கு எதிரான இருபதுக்கு – 20 போட்டியில் இந்தியாவுக்கு இலகு வெற்றி

June 27, 2022
நாட்டில் டெல்டா திரிபின் புதிய அலகு அடையளம்

கொவிட் வைரஸின் புதிய திரிபு கண்டுபிடிப்பு

June 27, 2022

Recent News

ராஜபக்ச குடும்பம் சொத்துகளை மறைத்து வைத்துள்ள நாடுகள் குறித்து தகவல்

ராஜபக்ச குடும்பம் சொத்துகளை மறைத்து வைத்துள்ள நாடுகள் குறித்து தகவல்

June 27, 2022
நாட்டின் பல பகுதிகளில் டோக்கன் முறையில் எரிபொருள் விநியோகம்

நாட்டின் பல பகுதிகளில் டோக்கன் முறையில் எரிபொருள் விநியோகம்

June 27, 2022
அயர்லாந்துக்கு எதிரான இருபதுக்கு – 20 போட்டியில் இந்தியாவுக்கு இலகு வெற்றி

அயர்லாந்துக்கு எதிரான இருபதுக்கு – 20 போட்டியில் இந்தியாவுக்கு இலகு வெற்றி

June 27, 2022
நாட்டில் டெல்டா திரிபின் புதிய அலகு அடையளம்

கொவிட் வைரஸின் புதிய திரிபு கண்டுபிடிப்பு

June 27, 2022
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures