வாத்துவ, தல்பிடிய பழைய பாலத்துக்கு அருகிலுள்ள வாகன உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் கடையொன்று தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐந்து மாடிகளைக் கொண்ட கடையொன்றே இவ்வாறு தீப்பிடித்துள்ளதா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாத்துவ பொலிஸார், களுத்துறை தீயணைப்புப் பிரிவு மற்றும் மின்சார சபை அதிகாரிகள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தீயிற்கான காரணம் இதுவரை அறியப்படாதுள்ளது. இத்தீயினால் பாரிய பொருட் சேதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

