யாழ். பண்ணை கடல் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் ஒருவர் நீரில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
குருசடி தீவில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சென்று கொண்டிருந்த போது, படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளனது என்று தெரிவிக்கப்படுகின்றது. நால்வர் கடலுக்குள் வீழ்ந்து நீரில் மூழ்கியினர் என்றும் அவர்களில் இருவர் மீட்கப்பட்டு யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

