யாழ்ப்பாணத்தில் நடக்கும் வாள்வெட்டு மற்றும் திருட்டுக் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சிறப்புப் கூட்டம் ஒன்று இராணுவத் தளபதி தலைமையில் நடைபெறுகின்றது.
துன்னாலையில் நடத்தப்படும் இந்தக் கூட்டத்தில் யாழ். குடாநாட்டில் உள்ள அனைத்து இராணுவ முகாம்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். குடாநாட்டில் நடந்த வாள்வெட்டு, திருட்டு, குற்றச் செயல்கள் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளர்களை விடுவிப்பது தொடர்பாகவும் அதில் ஆராயப்படுகின்றது என்று கூறப்படுகின்றது.
