அடுத்த மாதம் லாகூரில் 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் உலக லெவன் அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்த உலக லெவன் அணிக்கு தென் ஆப்பிரிக்க கேப்டன் ஃபாப் டுபிளெசிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹஷிம் ஆம்லா, மோர்னி மோர்கெல், டேவிட் மில்லர், இம்ரான் தாஹிர் ஆகியோர் உலக லெவன் அணியின் 14 வீரர்கள் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலியாவிலிருந்து பென் கட்டிங், ஜார்ஜ் பெய்லி, விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சர்வதேச தகுதி பெற்ற இந்தத் தொடர் செப்டம்பர் 12-ம் தேதி தொடங்குகிறது, அடுத்தடுத்து செப்.13 மற்றும் 15-ம் தேதிகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. முன்னாள் ஜிம்பாப்வே வீரரும் இங்கிலாந்து பயிற்சியாளராகவும் இருந்த ஆண்டி பிளவர் உலக லெவன் அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றுகிறார்.
உலக லெவன் அணி வீரர்கள் விவரம்:
டுபிளெசிஸ் (கேப்டன்), ஹஷிம் ஆம்லா, சாமுவேல் பத்ரீ, ஜார்ஜ் பெய்லி, பால் காலிங்வுட், பென் கட்டிங், கிராண்ட் எலியட், தமிம் இக்பால், டேவிட் மில்லர், மோர்னி மோர்கெல், டிம் பெய்ன், திசர பெரேரா, இம்ரான் தாஹிர், டெரன் சமி.

