Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நடிகர் ஹிப் ஹொப் தமிழா நடிக்கும் ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் அப்டேட்

May 24, 2026
in Cinema, News, இந்தியா, முக்கிய செய்திகள்
0
நடிகர் ஹிப் ஹொப் தமிழா நடிக்கும் ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் அப்டேட்

இசையமைப்பாளராகவும், நடிகராகவும், இயக்குநராகவும் தடம் பதித்து தமிழ் சினிமாவில் வெற்றிகரமான நட்சத்திரமாக வலம் வரும் ஹிப் ஹொப் தமிழா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘கோயிந்தம்மா..’ என்ற பாடலும்,  பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஹிப் ஹொப் தமிழா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ஹிப் ஹொப் தமிழா – ரம்யா ரங்கநாதன் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் யோகி பாபு ,கருணாஸ், ஹர்ஷத் கான், ‘ஆடுகளம்’ நரேன், நாசர், ஷா ரா , கெட்டிகா சர்மா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

மாதேஷ் மாணிக்கம் & பாலாஜி சுப்பிரமணியம் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹிப் ஹொப் தமிழா இசையமைத்திருக்கிறார். கல்லூரியில் பயிலும் மாணவர்களின் வாழ்வியல் பின்னணியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் மற்றும் அவ்னி மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஏ சி எஸ் அருண்குமார் மற்றும் குஷ்பூ சுந்தர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்… ‘கொயந்த போல சிரிக்கிறாளே.. கொழ சண்டை புடிக்கிறாளே..’ என தொடங்கும் பாடலும் ,பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர் ஹிப் ஹொப் தமிழா எழுத, பின்னணி பாடகர்கள் ஹிப் ஹொப் தமிழா, கௌஷிக் க்ரிஷ், கானா வினோத், ‘கானா உலகம்’ தரணி, கானா சுதாகர் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். துள்ளல் இசை பாணியில் சென்னை மக்களின் வட்டார இசையான கானா பாடலாக தயாராகி இருக்கும் இந்த பாடல்.. அனைத்து தரப்பு இசை ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

Previous Post

பசில் ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு

Next Post

சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

Next Post
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures