தேசிய கணக்காய்வு சட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும், அச்சட்டம் தாமதமாவது தொடர்பில் தனது மனவருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
ஊடகங்களின் பிரதானிகளுடன் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி இந்த அரசாங்கத்தில் யார் வேண்டுமென்றாலும் இணையவும் முடியும் அதேவேளை யார் வேண்டுமென்றாலும் அரசாங்கத்தில் இருந்து விளகவும் முடியும் என்றும் எவரும் எம்மோடு இணைந்து இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் கிடையாது என தெரிவித்தார்.
எவ்வாறாயினும் எமது நல்லிணக்க அரசாங்கம் 2020 வரை தொடரும் என்றும் அதில் எந்த ஒரு வீழ்ச்சியும் இடம்பெறாது எனவும் குறிப்பிட்டார்.(
