பிரபல மலையாளப்பட டைரக்டர் பாசிலின் மகன் பகத்பாசில். மலையாளத்தில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர். குறிப்பாக, ஹீரோ என்கிற இமேஜிற்குள் சிக்காமல் யதார்த்தமான கதையின் நாயகனாக நடித்து வருகிறார். தமிழில் மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் வேலைக்காரன் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகிறார் பகத்பாசில்.
இந்த நிலையில், ஆரண்யகாண்டம் படத்தை இயக்கிய தியாகராஜா குமாரராஜா இயக்கும் அநீதி கதைகள் படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கும் பகத்பாசில், அதைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் புதிய படத்திலும் சிம்பு, விஜய்சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார். ஆக, நேரடியாக தமிழில் நடித்த முதல் படம் திரைக்கு வருவதற்கு முன்பே, இரண்டு புதிய படங்களில் கமிட்டாகியிருக்கிறார் பகத்பாசில்.
