வாகனம் ஒன்றின் உள்ளே மனைவி சாக்ஷி முன்னால் டோனி சூப்பராக நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
பிரபல ஹிந்தி நடிகர் ஜான் ஆப்ரஹாமுக்கு சொந்தமான வேனில் தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
டெஸி பாய்ஸ் என்ற இந்தி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை சாக்ஷி ஒலிபரப்பிவிட்டு கணவர் டோனியை நடனமாடும் படி கேட்டு கொண்டார். இதையடுத்து தனது இடுப்பை வளைத்து சூப்பரான குத்தாட்டத்தை டோனி போட்டார்.
இதை கண்டு சிரிப்பை அடக்க முடியாத டோனியின் மனைவி சாக்ஷி தான் உட்கார்ந்திருந்த சோபாவில் விழுந்து புரண்டு சிரித்தார்.
இது சம்மந்தமான வீடியோ டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உட்பட சமுகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
