‘சித்து +2’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் சாந்தினி தமிழரசன். இந்த படத்தை தொடர்ந்து ‘நையப்புடை’, ‘வில் அம்பு’ உட்பட சில படங்களில் நடித்த பிறகும் சாந்தினி தமிழரசனுக்கு தமிழில் முன்னணி இடம் கிடைக்கவில்லை. தற்போது அரவிந்த் சாமியுடன் ‘வணங்காமுடி’ படத்தில் நடித்து வரும் சாந்தினி, ‘ராஜா ரங்குஸ்கி’ மற்றும் ‘பில்லா பாண்டி’ படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ‘ஜோக்கர்’ படத்தில் நடித்த சோமசுந்தரம் கதாநாயகனாக நடிக்கும் ஒரு புதிய படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். அமெரிக்காவில் இயக்குநர் பயிற்சி பெற்று வந்துள்ள மனோஜ் என்ற அறிமுக இயக்குநர் இப்படத்தை இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கிரைம் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு, அடுத்த மாதம் 5-ஆம் தேதி வரை பாண்டிச்சேரியில் தொடர்ந்து நடக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.
