முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் நேற்று காலமாகிய நிலையில் இன்று பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அவரது இல்லத்துக்கு வருகை தந்தவண்ணமுள்ளனர்.
இந்நிலையில், அவரது குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்கும் முகமாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று முற்பகல் விஜயம் செய்தார்.
இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களான மனோ கணேசன், நிமல் சிறிபால டி. சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற அலுவலர்கள் இன்று முற்பகல் அவரது இல்லத்துக்கு வருகை தந்திருந்தனர்.
முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வரின் ஜனாஸா இன்று மாலை தெஹிவளை பெரிய பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
