சைட்டம் மருத்துவக் கல்லூரி தொடர்பில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் திங்கட்கிழமை இறுதி முடிவைத் தெரிவிப்பார் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தச் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஹரித அலுத்கே இவ்வாறு தெரிவிததுள்ளார். அரச தலைவருடன் நடத்தப்பட்ட பேச்சின் பின்னர் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
