சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு படத்தில் காமெடியனாக நடித்து பிரபலமானவர் சூரி. அதையடுத்து வேகமாக வளர்ந்து விட்ட அவரை சிலர் ஹீரோவாக நடிப்பதற்கும் கேட்டுக்கொண்டு வந்தனர். ஆனால், அதற்கு அவர் பிடிகொடுக்கவில்லை. அதேசமயம், ஒரு சேஞ்சுக்காக குணசித்ர வேடங்களிலும் அவ்வப்போது நடிக்க வேண்டும் என்கிற ஆசை சூரியின் மனதளவில் இருந்திருக்கிறது.
அதனால்தான், சுசீந்திரன் இயக்கிய மாவீரன் கிட்டு படத்தில் குணசித்ர ரோலில் நடித்திருக்கிறார். ஆனால், அந்த வேடம் பெரிதாக ஒர்க்அவுட்டாகவில்லை. அதன்காரணமாக இனிமேல் குணசித்ர வேடங்களில் நடிக்கப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் சூரி. மேலும், சினிமாவில் நடிக்கிற காலம் வரை ரசிகர்கள் தன்னை ஏற்றுக்கொண்ட காமெடியனாக மட்டுமே நடிப்பது என்று முடிவெடுத்துள்ள சூரி, காமெடி காட்சிகளில் முடிந்தவரை வித்தியாசம் காட்டப்போகிறாராம். குறிப்பாக மாறுப்பட்ட வித்தியாசமான மேரிஸங்களை இனி தன்னுடைய படத்தில் வெளிப்படுத்த போகிறாராம்.
