தமிழ் சினிமாவின் பொக்ஸ் ஓபீஸ் சுப்பர் ஸ்டாராக திகழும் நடிகர் கார்த்தி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ வா வாத்தியார்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் நலன் குமாரசுவாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வா வாத்தியார் ‘ எனும் திரைப்படத்தில் கார்த்தி, கிருத்தி ஷெட்டி, சத்யராஜ் , ராஜ்கிரண், ரமேஷ் திலக், கருணாகரன், கு. ஞானசம்பந்தம், நிழல்கள் ரவி, இயக்குநரும், நடிகருமான ஜெய் கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜார்ஜ் சி. வில்லியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் 12-ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் பார்வையாளர்களுக்கு அற்புதமான பட மாளிகை அனுபவத்தை வழங்கும் என உறுதிப்படுத்தப்பட்டிருப்பதால்… படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது.

