கனடாவின் 67,200 வேலை வாய்ப்பு. வேலையின்மை நிதான நிலையில்

கனடாவின் 67,200 வேலை வாய்ப்பு. வேலையின்மை நிதான நிலையில்

ஒட்டாவா- 67,200 புதிய வேலை வாய்ப்புக்கள்ஏற்பட்டுள்ளதால் நாட்டின் தொழிலாளர்கள் சக்தி கடந்த மாதம் ஒரு ஆரோக்கியமான நிலையை எட்டியுள்ளது. பகுதி-நேரம் மற்றும் சுயதொழில் வேலைகள் பெரும்பாலானவைகளாகும் என கனடா புள்ளிவிபரவியல் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
எழுச்சி பெற்றிருந்தாலும் சமீபத்திய வேலைகள் குறித்த மதிப்பாய்வு தேசிய வேலையின்மையின் விகிதம் பின்வாங்கவே இல்லை எனவும் இரண்டாவது மாதமாக 7சதவிகிதத்திலேயே உள்ளதென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய வேலை வாய்ப்புக்களில் 44,100 பகுதி-நேர வேலைகள் எனவும் அதே சமயம் 50,100 சுய-தொழில் நிலைகளெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஏற்பட்ட அதிகரிப்பில் 55-வயது மற்றும் அதற்கும் கூடிய வயதுடைய கனடியர்கள் 56,400 மக்கள் வேலை பெற்றுள்ளனர். இவர்களில் 37,900 மேலதிக பதவிகள் பெண்களிற்காகும்
கியுபெக் கடந்த மாதம் மிகப்பெரிய அதிகரிப்பை-38,300புதிய வேலை வாய்ப்புக்கள்- காட்டியுள்ளது.இதே நேரம் ஒன்ராறியோவில் 16,200அதிகரிப்பு, அல்பேர்ட்டா13,300 மற்றும் நியு பிறவுன்ஸ்விக்4,400. பிரிட்டிஷ் கொலம்பியா 600பதவிகளால் சறுக்கியுள்ளது.
ஒரு வருடத்திற்கு முன்னயதுடன் ஒப்பிடும் போது கனடாவில் ஒட்டுமொத்தமாக 138,800மேலதிக வேலை வாய்ப்புக்கள்–88,500 பகுதி-நேர வேலைகள் உட்பட.

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News