ஊழல் என்பது தேசிய பொருளாதாரத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் என சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்துள்ளது.
ஒருவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலே அவர்களை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என கோரும் மனு மீதான வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது.
இது தொடர்பான உத்தரவில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ; இந்த விவகாரத்தில் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க இயலாத இடத்தில் நாங்கள் இருக்கிறோம். குற்றப்பத்திரிகை தாக்கல் என்பதை அடிப்படையாக வைத்து தகுதிநீக்கமும் செய்ய முடியாது.
பார்லி.,யில் சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டும். இருப்பினும் குற்றப்பின்னணி உள்ளவர்கள் தாங்களாகவே முன்வந்து தெரிவிக்க வேண்டும். மேலும் அரசியல் கட்சிகள் குற்றப்பின்னி உள்ளவர்களை புறம் தள்ள வேண்டும்.
நாட்டில் தற்போது ஊழல் பெரும் பிரச்சனையாக உள்ளது. ஊழல் என்பது நாட்டின் பொருளாதாரத்தின் மீது நடத்தப்படும் பயங்கரவாதம் போல் வளர்ந்து வருவது வேதனை அளிக்கிறது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

