இலங்கை மின்சார சபையின் சகல ஊழியர்களினதும் விடுமுறையை எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் செல்லுபடியற்றதாக மாற்றுவதற்கு சபையின் நிருவாகம் தீர்மானித்துள்ளது.
அத்தியாவசிய சேவையை ஒழுங்காக நடைமுறைப்படுத்தும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அவசியப்படும் ஊழியர்களுக்கு மாத்திரம் சம்பந்தப்பட்ட மேல் அதிகாரியின் அனுமதியின் பேரில் விடுமுறை பெற்றுக் கொள்ள முடியும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
எந்தவொரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டாலும், நாட்டு மக்களுக்கு மின்சாரத்தை வழங்குவது முக்கிய பொறுப்பாகும் எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை மின்சார சபை ஊழியர் தொழிற்சங்கங்கள் நேற்று நண்பகல் முதல் இரண்டு நாள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

