அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளில் அமெரிக்க வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் 20 ஆண்டுகளை நிறைவு செய்தார்.
1997-ம் ஆண்டு நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் அவர் 17 வயது இளம் வீராங்கனையாக களம் இறங்கினார்.
20-வது ஆண்டுகளாக அமெரிக்க ஓபனில் விளையாடி வரும் வீனஸ் வில்லியம்ஸ், நேற்று முன்தினம் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்றார். அப்போது அவர் கூறும்போது, “நான் இங்கு 20 ஆண்டுகளாக டென்னிஸ் போட்டிகளில் விளையாடி வருகிறேன்.
இன்னும் எத்தனை ஆண்டுகள் இங்கு விளையாடுவேன் என்று தெரியாது. இந்த ஆண்டுகள் மகிழ்ச்சி நிறைந்தவை. நானும் என் சகோதரி செரீனாவும் இணைந்து பல பயணங்களை மேற்கொண்டு விளையாடியுள்ளோம்.
ஒருவருக்கு ஒருவர் பயிற்சியாளராக இருந்துள்ளோம். தற்போது செரீனா இல்லாமல் தனியாக விளையாடி வருகிறேன். செரீனா மீண்டும் விளை யாட வரும் நாளுக்காக காத்திருக்கிறேன்” என்றார்

