வெள்ள அனர்த்தத்தால் தென்மேற்கு ஒன்ராறியோவின் அவசரகால நிலை பிரகடனம்!
கனடா-வின்ட்சர் ஒன்ராறியோ-ஒன்ராறியோவின் தென்மேற்கு பகுதி மேயர்கள் Windsor மற்றும் Tecumseh பகுதிகளிற்கு அவசர கால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.அப்பகுதிகளில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை சமாளிக்கும் பொருட்டு இந்நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலக்கீழ் குடியிருப்பு பகுதிகள் பெரும்பாலானவை மற்றும் வீதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மேயர் ட்ரு டில்கென் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து வியாழக்கிழமை அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
Tecumsehயில் புதன்கிழமை இரவு தொடக்கம் வியாழக்கிழமை வரை 190மில்லி மீற்றர்கள் மழை பெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அப்பகுதி மேயர் கிரே மக்னமாரா அவரசகால நிலையை பிரகடனப்படுத்தினார்.
மேலதிக மழை எதிர்பார்க்கப்படுவதால் நீர் வெளியேற்றும் நிலையங்கள் அதிக பட்ச கொள்ளளவு நீரை வெளியேற்றும் முயற்சியில் இறங்கியுள்ளன.
பல சுற்றுக்கள் மழை மற்றும் இடிமுழக்கம் போன்றன தொடர்வதால் Essex County வெள்ளிக்கிழமை பாதிக்கப்படலாம் என கனடா சுற்றுச்சூழல் தெரிவித்துள்ளது.40முதல் 70மில்லி மீற்றர்கள் அளவிலான மழை பெய்யலாம்.
வீதிகள் அனைத்திலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் சாரதிகள் வெள்ளம் நிறைந்த பகுதிகளை தவிர்க்குமாறும், வெள்ளம் நிறைந்த பகுதிகள், ஆறுகள், தண்ணீர் ஓடும் பகுதிகள், சிற்றோடைகள் மற்றும் நீரோடைகள் உள்ள பகுதிகளில் பிள்ளைகளை செல்ல விடாது கவனிக்குமாறு பெற்றோர்கள் எச்சரிக்கப்படுகின்றனர்.
Tecumseh போக்குவரத்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
காற்று மணித்தியாலத்திற்கு 45கிலோ மீற்றர்கள் வேகத்தில் வீசுவதால் வெள்ளம் கடற்கரை அரிப்பு மற்றும் அலைகள் சேதப்படுத்தப்படுவதால் சென் கத்தரின் கடற்கரை வின்ட்சர் Tecumseh மற்றும் லேக்சோர் பகுதிகளை பாதிக்கலாம் என Essex பிராந்திய பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.