நடிகர் விஷாலுக்கு சொந்தமான அலுவலகம் சென்னை வடபழனியில் உள்ள குமரன் காலனியில் உள்ளது.
திரைப்பட தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் மத்திய கலால் பிரிவின் கீழ் உள்ள ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 3 மணி நேரமாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.
பட நிறுவனத்தின் கணக்குகள் குறித்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
திரைப்பட நிறுவன கணக்கு வழக்குகள் குறித்தும் அதிகாரிகள் கேட்டறிந்து வருகின்றனர்.
விஷாலின் வீடு மற்றும் அலுவலகங்களில் ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்