தீபாவளி திருநாளை முன்னிட்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மெர்சல்’.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்குப் பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.
இதுவே படத்திற்கு பெரும் விளம்பரத்தை கொடுக்க, மக்கள் வெள்ளத்தால்வ அரங்குகள் நிறைந்தன.
மேலும் படத்தில் அந்த ஜிஎஸ்டி காட்சி நீக்கப்பட்டு விடுமோ? என்ற சந்தேகத்தினால் கூட்டம் அதிகரிக்க, காட்சிகளும் அதிகரித்தன.
பல பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு அதிகாலை காட்சியும் திரையிடப்பட்டது.
மேலும் சென்னையில் மூடப்பட்டிருந்த ஐநாக்ஸ், பிவிஆர் தியேட்டர்களும் மெர்சலுக்காக திறக்கப்பட்டன.
உலகளவில் 3 நாட்களில் சுமார் 100 கோடி வசூலைக் கடந்த, இப்படம் தற்போது 150 கோடியை நெருங்கிவிட்டதாக வியாபார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
விரைவில் உலகளவில் 200 கோடி வசூலை தொட்டுவிடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இப்போதே இதை கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கத் தொடங்கி விட்டார்களாம்.
தமிழகத்தில் முதல் 5 நாட்களில் வசூலில், ‘பாகுபலி 2′ மற்றும் ‘எந்திரன்’ ஆகியவற்றுக்கு பின்னால் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.