வவுனியா – தாண்டிக்குளம் பகுியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
படுகாயமடைந்த இருவரும் வவுனியா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.