அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மெர்சல் படம் இன்று தீபாவளி தினத்தில் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே இவர்கள் கூட்டணியில் வெளியான தெறி படம் ஹிட்டானதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருந்தது.
எனவே ரசிகர்களும் இப்படத்தை வரவேற்க தோரணம் கட்டி, போஸ்டர், பேனர் என அமர்களப்படுத்தி மெர்சல் தீபாவளியாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரத்தை அடுத்த வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே மெர்சல் பட பேனரை கட்ட குடிநீர் குழாய் மூலம் சுவரின் மீது நான்கு விஜய் ரசிகர்கள் ஏறினர்.
இதில் எவரும் எதிர்பாரா வகையில் சுவர் இடிந்து விழுந்ததில் கீழே நின்று கொண்டிருந்த 24 வயது வாலிபர் பலியாகியுள்ளார்.
எனவே வாலாஜாபாத் போலீசார் இது தொடர்பான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.