முன்னாள் பிரதி அமைச்சர் கீதாஞ்ஜன குணவர்தன பயணித்த வாகனம் அவிஸாவெல – கொழும்பு பிரதான வீதியிலுள்ள கொஸ்கம பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு இடம்பெற்ற இவ்விபத்தில் காயமடைந்த கீதாஞ்ஜன குணவர்தன காயமடைந்த நிலையில் அவிசாவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவருடைய வாகனத்தில் மோதிய வாகனத்தில் இருந்து நான்கு கிலோ கஞ்ஜாவை பொலிஸார் மீட்டுள்ளனர். இந்த வாகனத்தில் பயணித்த இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று (22) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.