ஜப்பானில் முதியவர்கள் தமது வாகன ஓட்டுனர் உரிமத்தை கைவிட்டால் ஊக்கப்பரிசுகள் வழங்கப்படும் என்று அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாகனம் ஓட்டுவதை நிறுத்தினால் பரிசா?
அறுபத்தி ஐந்து வயதுக்கும் மேலானவர்களாலும், குறைவான நம்பிக்கையோடு வாகனத்தை செலுத்தும் நபர்களாலும் ஏற்பட்ட வாகனவிபத்துக்களில் பலர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஜப்பானின் சில பிராந்தியங்கள் முதியவர்கள்வாகனங்களை ஓட்டாமலிருக்க ஊக்கப்பரிசுகளை அளிக்கின்றனர்.
வாகனம் ஓட்டுவதை நிறுத்தினால் பரிசா?
மலிவான விலையில் உணவு வகைகள் மற்றும் வாடகை கார் பயணங்கள், பொதுக்குளியலறை கட்டணங்களில் சலுகைகள், மலிவான விலையில் ஈமச்சடங்குகள் போன்ற சலுகைகளை வழங்கி வருகின்றனர்.
உலகிலேயே இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு அதிகமாக செலவாகும் ஜப்பான் நாட்டில் மலிவான விலையில் ஈமச்சடங்குகள் என்பது முதியவர்களை தமக்கு இணங்க வைக்கும் உத்தியாக காணப்படுகிறது.
வாகனம் ஓட்டுவதை நிறுத்தினால் பரிசா?
எனினும் பல முதியவர்கள் தமது வாகன ஓட்டுனர் உரிமத்தை கைவிடுவதற்கு இது பொன்ற சலுகைகள் போதாது என ஏற்றுக்கொள்ள மறுத்து வருகின்றன