மியான்மரில் ராணுவ நடவடிக்கைக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து தப்பி அண்டை நாடான வங்க தேசத்தில ்தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதில் பலர் இந்தியாவிலும் அடைக்கலம் தேடி வருகின்றனர்.
ரோஹிங்கியா அகதிகள் பிரச்னை கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவுக்கும், வங்க தேசத்துக்கும் பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. அண்மைக்காலமாக ராணுவ நடவடிக்ைக தீவிரம் அடைந்திருப்பதை தொடர்ந்து உயிருக்கு பயந்து அந்நாட்டிலிருந்து வெளியேறும் அகதிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்த இரு நாட்டையும் பிரிக்கும் பிரிக்கும் நாப் நதியில் ஆபத்தான முறையில் படகில் ரோஹிங்கியாக்கள் பயணித்து வருகின்றன. கடந்த ஆகஸ்ட் முதல் நேற்று வரை 200க்கும் மேற்பட்டோர் படகு விபத்தில் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை ஏற்பட்ட படகு விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 5 பேர் படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 12க்கும் மேற்பட்டோர் காணவில்லை.
21 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக வங்க தேச எல்லை பாதுகாப்பு படை உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
சிறிய மீன்பிடி படகில் 50க்கும் மேற்பட்டோர் பயணித்ததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.