ஹபரனை – திருகோணமலை வீதியில் பாரவூர்தி ஒன்று காட்டு யானை ஒன்றுடன் மோதுண்டுள்ளது.
குறித்த விபத்து நேற்று 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தினை தொடர்ந்து, காட்டு யானை படுகாயமடைந்துள்ளதுடன், பாரவூர்தியில் பயணித்த சாரதி உட்பட 5 பேர் காயமடைந்துள்ள நிலையில் தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், படுகாயமடைந்த காட்டு யானைக்கு வன விலங்கு காரியாலய அதிகாரிகள் சிகிச்சையளிப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.