ரொறொன்ரோ பெரும்பாகத்தின் சில பகுதிகளில் பனிபுயல் உடன் கூடிய குளிர்காலநிலை ?

ரொறொன்ரோ பெரும்பாகத்தின் சில பகுதிகளில் பனிபுயல் உடன் கூடிய குளிர்காலநிலை ?

ரொறொன்ரோ பெரும்பாகத்தின் வடபகுதிகளில் வசிப்பவர்கள் வியாழக்கிழமை முதல் குளிர்காலநிலையை ருசிக்கத் தொடங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா சுற்று சூழல் மாகாணத்தின் சில பகுதிகளில்-ரொறொன்ரோ வடபகுதிகள் உட்பட்ட பனிபுயல் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நியுமார்க்கெட், ஜோஜினா, வடக்கு யோர்க் மற்றும் டர்ஹாம் பிரதேசங்கள், பார்ரி, அக்ஸ்பிரிட்ஜ், ஒரில்லா மற்றும் மிட்லன்ட் பகுதிகள் பாதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை பிற்பகுதியில் பனிபுயல் ஆரம்பமாகலாம். பலத்த பனிபுயல் ஏற்படலாம் என சமீபத்திய அறிகுறிகள் பரிந்துரைக்கின்றன.
போக்குவரத்து அபாயகரமானதாக இருக்கும் என கனடா சுற்று சூழல் அறிவித்துள்ளது.
கட்டாயம் பயணம் செய்ய நேரிட்டால் உங்கள் அட்டவணை மற்றும் இலக்குகளை மற்றவர்களிற்கு தெரியப்படுத்துமாறும் அவசர கால கருவிப்பெட்டி, மொபைல் போன் ஆகியவற்றை வைத்திருக்குமாறும் காலநிலை ஏஜன்சி அறிவுறுத்துகின்றது.

snow1snow

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
Easy24News

Recent News