முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, குத்தகைக்குப் பெற்ற சொகுசு வீட்டின் உரிமையாளரான அனிகா விஜேசூரிய, அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வௌியேறியுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.
ரவி கருணாநாயக்க தங்கியிருந்த வீட்டுக்கான குத்தகைப் பணத்தை அர்ஜுன் அலோசியஸ் வழங்கியதாக, அனிகா விஜேசூரிய அண்மையில் சாட்சியமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.