மார்செய் நகரில் இரட்டை கொலை பயங்கரவாத தாக்குதல் நடத்தியிருந்த Ahmed Hanachi இன் சகோதரன், இத்தாலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை பிரெஞ்சு அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை என்ற போது, இத்தாலிய ஊடகங்களால் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. சனிக்கிழமை இந்த கைது சம்பவம் இடம்பெற்றதாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை செய்திகள் வெளியாகியுள்ளனர். துனிசிய குடியுரிமை கொண்ட குறித்த நபர், இத்தாலியின் வடக்கு பிராந்தியமான Ferrara இல் வைத்து கைது செய்யப்பட்டுள்ளான்.
பிரெஞ்சு அதிகாரிகள், பயங்கரவாதியின் சகோதரனை கைது செய்யும் படி, சர்வதேச பிடியாணை வழங்கியதன் பின்னரே இப்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அறிய முடிகிறது. அதைத் தொடர்ந்து விரைவில் சகோதரன் பிரான்சுக்கு அழைத்துவரப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.