பாடசாலை மாணவி கர்ப்பமாகியுள்ளதாக பொய்யான பரப்புரை மேற்கொண்டு, பாடசாலையிலிருந்து மாணவியை வெளியேற்றிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கொழும்பு அரசின் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் மாவட்டத்தின் கெகிராவ கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலையில் 10 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவி கர்ப் பமடைந்துள்ளதாகத் தெரிவித்து அவர் பாட சாலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.
இதனையடுத்து இது தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சர் பணித்துள்ளார்.
மேற்படி பாடசாலை மாணவி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவர் கர்ப்பமாகவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.