தம்பலகாமம் பொலிஸ் பிரிவில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,
இவர் தனது மனைவியை உறவினர் விடொன்றுக்கு அனுப்பி விட்டு தூக்கில் தொங்கி உயிரிழந்த பரிதாப சம்பவம் திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் பொலிஸ் பிரிவில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த அப்துல் அஸன் அப்துல் அலீம் (வயது 53) என்பவராவர்.
இவர் ஏற்கனவே வேறு திருமணம் முடித்தவர் எனவும், அவரது முதல் திருமணத்தில் பிறந்த பிள்ளைகளுக்கு இன்று நீதிமன்றத்தில் பணம் கட்ட வேண்டியுள்ளதாகவும் மன உளைச்சலில் இருந்ததாகவும் இதுவே காரண மாக இருக்கலாம் என குடும்பத்தினர்கள் தெரிவித்தனர்.
இவரது சடலம் மேலதிக விசாரணைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.