மீன்களை ஏற்றிச் சென்ற பாரவூர்தியில் மதுபானப் போத்தல்களைக் கடத்திச் சென்ற நபர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.
தங்காலையில் இருந்து பிபில நோக்கிச் சென்ற பாரவூர்தியை மடக்கிப் பிடித்த பொலிஸார், அதனைச் சோதனையிட்டனர்.
அதில் 30 க்கும் மேற்பட்ட மதுபானப் போத்தல்கள் கடத்திச் செல்லப்பட்டமை கண்டறியப்பட்டது.
பாரவூர்தியின் சாரதியைக் கைது செய்தனர்.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக அம்பலன்தோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.