சாதாரண மக்களின் தேவை ஒன்றாகவும், அரசியல்வாதிகளின் தேவை வேறொன்றாகவும் இருப்பதுவே பிரச்சினைகள் தீர்க்கப்படாமைக்கான காரணம் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தீர்க்க முடியாது என கூறப்பட்ட யுத்தத்தை நாம் முடிவுக்கு கொண்டுவந்தோம். இன்று பொது மக்களின் பிரச்சினை வேறு. அரசியல்வாதிகளின் பிரச்சினை வேறாகவுள்ளது. பொது மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரு புதிய அரசியல் அமைப்பொன்று உருவாக வேண்டியுள்ளது எனவும் கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.