பெரு தேவாலயத்தில் தீ விபத்து : 16ஆம் நுற்றாண்டின் கலைச்செல்வங்கள் அழிந்தன
பெருவின் காலணித்துவத்திற்கு உட்பட்ட நாடாக விளங்கும் கஸ்கோவில் அமைந்துள்ள உலகப்பிரசித்தம் பெற்ற புனித செபெஸ்ரியன் தேவாலயத்தில் தீ விபத்து நேற்று (வெள்ளிக்கிழமை) ஏற்பட்டுள்ளது.
குறித்த தீயினால் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட குறித்த தேவாலயத்தில் அமைந்திருந்த தங்கமுலாம் பூசப்பட்ட பலிபீடத்தின் பகுதிகள் மற்றும் ஒப்பற்ற ஓவியங்கள் போன்றன அழிந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த தீ விபத்தானது நேற்று அதிகாலை ஏற்பட்டிருப்பதாகவும், இவ்வனர்த்தத்திற்கு மின் ஒழுக்கே காரணம் என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, குறித்த பகுதியில் பொறுத்தப்பட்டிருந்த தீயணைப்புக் கருவிகள் பழுதடைந்து இருந்ததாகவும் அவற்றை சீர் செய்ய சுமார் இரண்டு மணி நேரம் வரை செலவானதாகவும் தீயணைப்பு வீரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்தடன், உள்ளூர் பாதிரியார் ஒருவர் கூறுகையில், பிரதேச மக்கள் ஒன்றிணைந்து தீணை கட்டுப்படுத்த முற்பட்டதாகவும், தாம் அனைவரும் ஓடிச்சென்று அருகில் இருந்த ஆறொன்றில் இருந்து தண்ணீர் எடுத்துவந்து ஊற்றியதாகவும், இருப்பினும் அந்த செயற்பாடுகள் யாவும் தாமதம் காரணமாக பயனளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தேவாலயத்தின் கட்டடத்திற்கு பாரிய சேதங்கள் இல்லாத போதிலும், ஆலயத்தின் உட்பக்கம் மற்றும் கலைப்பொருட்கள் அனைத்தும் உருக்குலைந்துவிட்டதாக கவலை வெளியிட்டுள்ளனர். மேலும், ஒப்பற்ற கலைஞனான Diego Quispe Titoஇன் ஆக்கங்களும் அழிந்துவிட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.