புதிய அரசியலமைப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக மகாநாயக்க தேரர்களைச் சந்திப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் நேற்று (24) நடாத்திய கூட்டத்தின் போது இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தள்ளார்.