தமிழில் வெளியாகி பரவலாக பேசப்பட்ட படம் கல்யாண சமையல் சாதம். பிரசன்னா, லேகா வாஷிங்டன் நடிப்பில் வெளியான இப்படத்தை அறிமுக இயக்குநர் ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கினார். இதேபடம் ஹிந்தியில் சுப மங்கல் சாவ்தன் என்ற பெயரில் ரீ-மேக்காகி சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றது. தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூர் தயாரிக்கும் படம் ஒன்றை பிரசன்னா இயக்க உள்ளார்.
இதுகுறித்து சித்தார்த் ராய் கபூர் கூறுகையில், சுபமங்கல் படத்தை பலரும் விரும்பி பார்த்தார்கள், அதிலும் நானும் ஒருவன். திறமையான இயக்குநர், புதிய கதைக்களத்துடன் தனித்து இயங்கி வருகிறார். நாங்கள் இருவரும் இணையும் படம் ஒரு மறக்க முடியாத படமாக இருக்கும் என்றார்.