பாகிஸ்தானுடன் நடைபெற்று வரும் ஒரு நாள் போட்டித் தொடருக்கான, அணியைப் பலப்படுத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விசேட நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வகையில், அடுத்த போட்டியில் கலந்துகொள்ளச் செய்ய இலங்கையிலிருந்து சகல துறை ஆட்டக்காரரான சதீர சமரவிக்ரமவை அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இவர் இதுவரையில் ஒரு டெஸ்ட் போட்டியில் மாத்திரமே கலந்துகொண்டுள்ளதுடன், சர்வதேச ஒருநாள் போட்டிகள் எதிலும் கலந்துகொள்ளவில்லையெனவும் கூறப்படுகின்றது.
இவர் பயிற்சிப் போட்டிகளில் அதிககூடிய ஓட்டங்களைக் குவிக்கக் கூடிய ஒருவராக விளங்கியுள்ளார். அத்துடன், ரி.20 போட்டிகளிலும் சிறந்த முறையில் பிரகாசித்து வருகின்றார்.
இவர் தற்பொழுது மேற்கிந்திய தீவுகள் அணியுடன் ஏ பிரிவிற்கான கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.